இராஜபாளையம் அருகே
நெற்பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் நிரந்தர தீர்வு எப்போது?
விருதுநகர் மாவட்டம்,
சேத்தூர் அருகே நெற்ப யிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராஜபாளையம் அடுத்த சேத்தூர் மற்றும் சுற்று
வட்டாரப்பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது சிலேமநேரி கண்மாய் அருகே சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்கள் நன்கு கதிர் விட்டு உள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் கூட்டமாக வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். காட்டுப்பன்றிகள் தொடர்ந்து பயிர்களை நாசமாக்குவதால் ஒரு சில விவசாய பணிகளை தொடர்ந்து செய்ய முடியாத நிலை உள் ளது. கடன் வாங்கி சாகுபடி செய்தாலும் அதிக மகசூல் பெறும் வேளையில் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசமாக்குவதால் அதனை
முழுமையாக அறுவடை செய்ய முடியாத நிலை நிலவுகிறது. எனவே நெற்பயிர், மக்காச்சோளம் உள்ளிட்ட
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தவும், காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல
காட் டுப்பன்றிகள் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வுகாணவும் அவர்கள் வலியுறுத்தினர்.