இராஜபாளையம் அருகே லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் உள்ள புனல்வேலி பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆய்வில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (60) என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை எழுதி விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து எண்கள் எழுதிய வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.