ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
ராஜபாளையம் மலையடிபட்டி நான்கு முக்கு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

டிபி மில்ஸ் சாலையில் நடைபெற்று வரும் ஓடை பால பணிகளை விரைந்து முடிக்கவும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மலையடிப்பட்டி வழியாக மாணவர்களும், நூற்பாலை தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் சத்திரப்பட்டிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும்,

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சீர் செய்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you