த. வெ. க சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி

65பார்த்தது
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவுபடி, பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மத்திய மாவட்ட தலைவர் சின்னப்பர் ஆலோசனையின் படி,
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ‌ அருப்புக்கோட்டையில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மாரீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன் தேசியக்கொடியும் வழங்கப்பட்டது. ‌ இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி