விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கோகுல் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஆடிட்டர் படிப்பு பயிலாமல் ஆடிட்டர் எனக்கூறி அருப்புக்கோட்டை வியாபாரிகளிடம் ஜிஎஸ்டி கணக்கு பராமரித்து வந்ததாகவும், இந்நிலையில் வியாபாரிகளிடம் பெற்ற ஜிஎஸ்டி வரிப்பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாகவும் வியாபாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்து தலைமுறைவாக உள்ள திமுக நகர்மன்ற உறுப்பினர் கோகுலை வலைவீசி தேடி வருகின்றனர். தேர்தல் ஆணையச் சட்டம் ஒவ்வொரு மாதமும் நகராட்சி கமிஷனர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஆகியோர் ஏற்பாடு செய்யப்படும் நகர் மன்ற கூட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வந்து வார்டுக்குரிய கோரிக்கைகள் முன்மொழிவாக வைத்து பரிகாரம் தேடிக் கொள்வது நகர்மன்றத்தின் மரபு ஆகும். மேலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் கூட்டத்திற்கு வந்து வருகை பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும். ஆனால் திமுக நகர் மன்ற உறுப்பினர் கோகுல் இதுவரை நடைபெற்ற கடந்த மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் வரை நடைபெற்ற 8 நகர்மன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. 7 வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் கோகுல் என்பவர் தலை மறைவாக உள்ள நிலையில் கடிதத்தினை நகராட்சி ஊழியர் மூலம் ஒட்டியுள்ளனர்