நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

79பார்த்தது
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 26 வயது நிரம்பிய இளம் மருத்துவர் கௌஷிக் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று
ஏப்ரல் 3 காலை 11: 00 மணி முதல் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திறந்த ஜீப்பில் ஒவ்வொரு பகுதியாக சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீக்கடை, பழக்கடை, பூக்கடை என அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், காசுக்காக வாக்களிக்காதீர்கள், சிந்தித்து வாக்களியுங்கள், ஒரு மாற்றம் வேண்டும் என்றால் அடுத்த தலைமுறைக்கு வாக்குளியுங்கள், இளம் மருத்துவராகிய எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், வாக்கு மிக சக்தி வாய்ந்தது, அது தப்பானவர்களுக்கு சேர்ந்தால் அடுத்த ஐந்து வருடம் நீங்கள் கஷ்டப்படுவீர்கள்‌ எனக் கூறி வாக்கு சேகரித்தார். ‌

டேக்ஸ் :