முன் விரோத்தால் ஏற்பட்ட விபரீதம்

62பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(50). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் சீனிவாசன் என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் வெங்கடேசுக்கும், சீனிவாசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் வெங்கடேஷ் ஆணுறுப்பை சீனிவாசன் கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வெங்கடேஷ் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சீனிவாசன் கூட்டாளிகள் இருவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி