அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம்

50பார்த்தது
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம்
அருப்புக்கோட்டை பாண்டியன் தெருவில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை பாண்டியன் தெருவில் இன்று ஏப்ரல் 15 மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு, அவர்களின் மருத்துவ அறிக்கை விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

தொடர்புடைய செய்தி