நான் முதல்வன் திட்டத்தில் களப்பயணம் வந்த மாணவர்கள்

382பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி கற்பது குறித்து களப்பயணம் வந்த அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 23
அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 19 அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 535 மாணவ, மாணவியர்கள் நான் முதல்வன் திட்டத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரிக்கு களப்பயணம் மேற்கொண்டனர். உயர்கல்வி கற்பது குறித்து களப்பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தேவாங்கர் கலைக் கல்லூரி சார்பாக மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து. மேலும் கல்லூரி ஆசிரியர்கள் பூக்கள் வழங்கியும் பன்னீர் தெளித்தும் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் எந்த படிப்பு படித்தால் பயனடையலாம் கல்லூரியில் எந்தெந்த வசதிகள் உள்ளது, ஆய்வக வசதிகள், விளையாட்டு அரங்கம், நூலகம் மற்றும் அறிவியல் துறையில் உள்ள படிப்புகள் குறித்து ஆசிரியர்கள் விளக்கினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உமாராணி, துணை முதல்வர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் கல்லூரி பேராசிரியர்கள் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் தேசிய மாணவர் படை அலுவலர்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :