விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

59பார்த்தது
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அருப்புக்கோட்டை பொறுப்பு கோட்டாட்சியரான சாத்தூர் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர், வனத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, விவசாயத்துறை அதிகாரிகள் என பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி வைகை குண்டாறு பாசன விவசாய சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் பேசும்போது, டெல்டா மாவட்டத்தில் காவிரி நீர் வரத்து குறைவால் நெல் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் காவிரி நீருக்காக போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழக அரசு தமிழகத்துக்கு உண்டான காவேரி நீர் பங்கினை பெற்றுத் தர வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கும் விவசாய பண்ணை மூலம் விவசாயிகளுக்கு வழங்கி வரும் தக்காளி செடி, மல்லிகை பதியம் மரக்கன்றுகள் உரிய முறையில் தரமானதாக வழங்க வேண்டும் எனவும், மேலும் நரிக்குடி பகுதியில் தமிழக அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் எப்போது கிடைக்கும் எவ்வளவு என விவசாயிகள் தெரியாமல் உள்ளனர். இதற்கு காலத்தை நிர்ணயித்து உரிய நிவாரணம் தர வேண்டும் என கூறினார். கம்பக்குடி கால்வாய் தமேலும் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற மனு அளித்தனர்.