விழுப்புரத்தில் முடிதிருத்துவோர் நலச்சங்க செயற்குழு கூட்டம்.

69பார்த்தது
விழுப்புரத்தில் முடிதிருத்துவோர் நலச்சங்க செயற்குழு கூட்டம்.
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அனைத்து அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலச்சங்கம், முடிதிருத்துவோர் நலச்சங்கத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாநில, மாவட்ட செயற்குழு கூட் டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். புருஷோத்தமன், ராஜீவ், கலைவாணன், ஜெயமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். கட்சி நிறுவனர் செல்வம், டாக்டர் லட்சுமணன் எம். எல். ஏ. , முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், சர்வ சக்தி நலச்சங்க மாநில இணை செயலாளர் நிர்மலாம்பாள், வக்கீல் துரைராஜ், வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், சலூன் கடை வைத்து தொழில் நடத்தி வரும் மருத்துவ சமுதாய அமைப்பினருக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும், சலூன் கடைகள் வைப்பதற்கு ரூ. 10 லட்சம் கடனுதவி வழங்க வேண்டும், மருத்துவ சமுதாயத்தினருக்கு சாதி விகிதாச்சார அடிப்படையில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்லத்துரை, கோபிகிருஷ்ணன், ஏழுமலை, வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி