விழுப்புரத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் திருட்டு

569பார்த்தது
விழுப்புரத்தில் பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் பூட்டை உடைத்து உதிரிபாகங்கள் மற்றும் பணம் கொள்ளை மோப்பநாய் ராக்கி உதவியுடன் போலீசார் விசாரணை*


விழுப்புரம் எல்லீசத்திரம் சாலையில் உள்ளது. பிரபல இருசக்கர வாகன ஷோரூம் (நியூ சிட்டி ஹோண்டா) இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் விருத்தாசலம் பகுதியை இக்பால் என்பவருக்கு சொந்தமானது. இந்த நிலையில் இருசக்கர வாகன ஷோரூம் மேலாளராக அபு என்பவர் உள்ளார். இன்று வழக்கபோல் மேலாளர் அபு ஷோரூமை திறப்பதர்க்கு வரும்போது ஷோரூம் பூட்டு உடைத்து இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உரிமையாளர்க்கும் விழுப்புரம் தாலுக்கா போலீசார்க்கும் தகவல் கொடுத்ததன் பேரில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் மோப்ப நாய் ராக்கி உதவியுடன் போலீசார்கள் மேகநாதன், பாபு தலைமையில் போலீசார் தீவிரமாக அங்கு சோதனை செய்தனர். அப்போது உள்ளே இருசக்கர வாகன உதிரிபாங்கள் அறையை உடைத்து பல ஆயிரம் மதிப்பிலான உதிரிபாங்கள் மற்றும் மேலாளர் அபு அறையில் இருந்த லாக்கரை உடைத்து கல்லாவில் இருந்த ரொக்க பணம் 10 ஆயிரம் ரொக்க பணத்தையும் சிசிடிவி கேமராவை உடைத்து பதிவு செய்யும் ஹார்டு டிஸ்க் கையும் கொள்ளை அடித்து சென்று விட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் கொள்ளை அடித்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி