விழுப்புரத்தில் கால் நடைத்துறை சார்பில் 60 விவசாயிகளுக்கு மின் விசை புல் வெட்டும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கால்நடை பராமரிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி, கருவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது: தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கால்நடைத் துறை சார்பில், கால்நடைகளுக்கு கோமாரி நோய், சினை உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மற்றும் இலவச புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கால்நடைத்துறை சார்பில் 2023-24ம் ஆண்டுக்கு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் மின் விசையால் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்திற்கு 60 கருவிகள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படும் கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார். நிகழ்ச்சியில், கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குனர் லதா, துணை இயக்குனர் அழகுவேல், உதவி இயக்குனர் மோகன், மருத்துவர்கள் உஷாநந்தினி, பாலாஜி மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.