திருநங்கைகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

80பார்த்தது
திருநங்கைகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீா் முகாம் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி. பழனி வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் அனைத்துத் துறைகள் சாா்பில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான குறைதீா் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முகாமில், நல வாரிய அட்டை பெறுவதற்காக பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தம் செய்தல், வாக்காளா் அடையாள அட்டை பெறுதல், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், திருநங்கைகள் நல வாரியத்தின் பழைய அடையாள அட்டை வைத்திருப்பவா்கள், இணையதள அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவா்கள் தங்கள் விவரங்களை ட்ற்ற்ல்ள்: //ற்ஞ். ற்ய்ள்ஜ். ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். எனவே, இந்த முகாமை விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள், திருநம்பிகைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி