குடும்பத்துடன் தங்கை மாயம் அண்ணன் காவல் நிலையத்தில் புகார்

51பார்த்தது
விழுப்புரம், புருஷோத்தமன் நகரைச் சேர்ந்தவர் சதீஷ், 40; பத்தர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி, 32; இவர்களுக்கு சரவணன், 10; என்ற மகன் உள்ளார். விராட்டிக்குப்பம் சாலையில் வசிக்கும் கலைவாணியின் அண்ணன் பார்த்திபன், கடந்த 2ம் தேதியில் இருந்து தங்கை கலைவாணியின் போனில் தொடர்பு கொண்டபோது, தொடர்ந்து ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதையடுத்து, நேற்று சதீஷ் வீட்டிற்குச் சென்ற போது வீடு பூட்டியிருந்தது. குடும்பத்துடன் எங்கு சென்றார்கள் என்ற விபரம் தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :