ராமஜோதி ஏற்றி வழிபட பாஜகவினர் வேண்டுகோள்

52பார்த்தது
ராமஜோதி ஏற்றி வழிபட பாஜகவினர் வேண்டுகோள்
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22- ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அன்றைய தினம் தீபாவளியை போன்று உங்கள் வீடுகளில் ராமஜோதி ஏற்றி கொண் டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகொள் விடுத்திருந்தார் இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏமப்பூர், சிறுவானூர், பேரங்கியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விழுப்பு ரம் தெற்கு மாவட்ட பா. ஜனதா துணை தலைவர் வேலு தலைமையில் அக்கட்சியினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை வழங்கினார்கள். மேலும், அன்றைய தினம் ராமஜோதியை வீடுகளில் ஏற்றி வழிபாடு செய்யுமாறும் அவர்கள் வேண்டுகொள் விடுத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி