தனியார் மருத்துவமனையில் இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது

65பார்த்தது
தனியார் மருத்துவமனையில் இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது
விழுப்புரத்தில் மெட்வே மருத்துவமனையில் மருத்துவமனை குரூப் நிறுவனர் மற்றும் சேர்மன் பழனியப்பன் ஆலோசனையின் பேரில் இருதய நோய் பரிசோதனை முகாம் நடந்தது. காலை 10: 00 மணி முதல் மாலை 3: 00 மணிவரை நடந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். முகாமில், 999 ரூபாயில் ரத்தம், சக்கரை, கொலஸ்ட்ரால் பரிசோதனை, ஈ. சி. ஜி. , எக்கோ கார்டியோகிராம் (ஸ்கிரீனிங்), பரிந்துரைகளுடன் விரிவான சுகாதார அறிக்கை வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்றோரை, இருதயநோய் டாக்டர்கள் ஜெய்சங்கர், கார்த்திகேயன் ஆகியோர் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கினர். டாக்டர்கள் தரப்பில் கூறுகையில், இருதய நோய் சம்மந்தமாக வருவோருக்கு, அவர்களுக்கான பாதிப்புகளை அறிந்து மருந்து மூலமும், கதிர்வீச்சு மற்றும், பேஸ் மேக்கர், பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கப்படுகிறது. மேலும், இந்த மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றனர்.

தொடர்புடைய செய்தி