சென்னைக்கு படையெடுத்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல்

61பார்த்தது
சென்னைக்கு படையெடுத்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. சென்னை தலைநகரில் பணிபுரிபவர்களும், தென் மாவட்டத்தில் பணிபுரிபவர்களும் தங்களது பிள்ளைகளை சொந்த ஊருக்கு கோடை விடுமுறைக்காக அனுப்பி வைத்தனர். வெயில் அதிகரித்ததன் காரணமாக 6ம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால், சொந்த ஊரிலிருந்து பள்ளிகளுக்கு செல்ல திரும்பியதாலும், நேற்றும், இன்றும் வைகாசி மாதத்தின் வளர்பிறை முகூர்த்தம் என்பதாலும் நெடுஞ்சாலையில் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்தன. இதனால் திருச்சி - சென்னை சாலையிலும் , சென்னை - திருச்சி சாலையிலும் பாதசாரிகள் சாலையை கடக்க முடியாத வகையில் வாகன போக்குவரத்து இருந்தது. எஸ். பி. , தீபக் சிவாச் உத்தரவின் பேரில் நேற்று காலை முதல் நெடுஞ்சாலையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் போலீசார் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர். விக்கிரவாண்டி டோல்கேட்டில் நேற்று மாலை 4: 00 மணி முதல் சாலைகளில் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து காணப்பட்டதால் கூடுதல் லேன்களை திறக்க முடியாமல் வழக்கமாக வாகனங்கள் செல்லும் 6 லேன்கள் மட்டுமே திறந்திருந்தது. நேற்று 50 ஆயிரம் வாகனங்கள் டோல்கேட்டை கடந்து சென்றன.

தொடர்புடைய செய்தி