மத்திய ஒன்றியத்தில் கவுதமசிகாமணி எம். பி. , ஓட்டு சேகரிப்பு

51பார்த்தது
மத்திய ஒன்றியத்தில் கவுதமசிகாமணி எம். பி. , ஓட்டு சேகரிப்பு
விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி இந்தியா கூட்டணி வி. சி. , வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கவுதமசிகாமணி எம். பி. , விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்தார்.

விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதியில் தி. மு. க. , தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி, டாக்டர் கவுதமசிகாமணி எம். பி. , விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கஸ்பாகாரணை, தும்பூர், உலகலாம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வி. சாத்தனுார், பொன்னங்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, வி. சாலை, கொங்கராம்பூண்டி, சின்னதச்சூர் கிராமங்களில் உள்ள பொதுமக்களை, டாக்டர் கவுதமசிகாமணி எம். பி. , நேரில் சந்தித்து, தமிழக அரசின் சாதனைகளை கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தார்.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், தி. மு. க. , பொருளாளர் ஜனகராஜ், விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி