மாவட்டத்தில் துணை பி. டி. ஓ. , க்கள் 30 பேர் இடமாற்றம்

71பார்த்தது
மாவட்டத்தில் துணை பி. டி. ஓ. , க்கள் 30 பேர் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி துறையில் துணை பி. டி. ஒ. , க்கள் 30 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் மண்டல துணை பி. டி. ஒ. , க்கள் 30 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முகையூர் ஒன்றியம் மண்டலம் 1 ரேவதி, அங்குள்ள சத்துணவு பிரிவிற்கும், காணை ஒன்றியம் மண்டலம் 3 குணமணி, திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம் தணிக்கை பிரிவிற்கும், மயிலம் ஒன்றியம் மண்டலம் 3 ஜெயபாலன், அங்குள்ள ஊராட்சிகள் பிரிவிற்கும், இங்கிருந்த பாபு காணை ஒன்றியம் சத்துணவு பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காணை ஒன்றியம் சத்துணவு பிரிவு கலா, அங்குள்ள ஊராட்சிகள் பிரிவிற்கும், அங்கிருந்து மகாலட்சுமி, முகையூர் ஒன்றியம் ஊராட்சிகள் பிரிவிற்கும், அங்கிருந்த அசோக்குமார், காணை ஒன்றியம் பொது பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோலியனுார் ஒன்றியம், மண்டலம் 4 பாபு, அங்குள்ள பொது பிரிவிற்கும், கண்டமங்கலம் ஒன்றியம் மண்டலம் 3 உமா, அங்குள்ள சத்துணவு பிரிவிற்கும், விக்கிரவாண்டி ஒன்றியம் மண்டலம் 4 ேஹமலதா, அங்குள்ள சத்துணவு பிரிவிற்கு உட்பட 30 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பழனி பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி