அ. தி. மு. க. , பயிற்சி பட்டறை

77பார்த்தது
அ. தி. மு. க. , பயிற்சி பட்டறை
திருக்கோவிலுார் தொகுதிக்கு அ. தி. மு. க. , தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை சந்தப்பேட்டையில் நடந்தது. நகர செயலாளர் சுப்பு வரவேற்றார். தொகுதிக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் நிர்மல் குமார், விழுப்புரம் மண்டல தலைவர் அருண் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பேசியதாவது:

தி. மு. க. , அரசின் ஊழல்கள் மறைக்கப்படுகிறது. இதனை நாம் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு சிறப்பாக செயலாற்ற கட்சி தலைமை அனைத்து வசதிகளும் தங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

சிறப்பாக செயல்படும் தகவல் தொழில்நுட்ப அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் இரண்டாம் பரிசாக 50, 000 மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், பழனிச்சாமி, இளங்கோவன், தனபால்ராஜ், ராம லிங்கம், ஏகாம்பரம், அரகண்டநல்லூர் நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி