விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொங்கராயனுார் பிள்ளையார்கோயில் வீதியை சேர்ந்த அய்யப்பன் மகன் அரவிந்தன்(17). இவர் சித்தலப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அரவிந்தன், கடந்த 3 மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், குணமாகவில்லை. நேற்று முன்தினம் 8ம் தேதி காலை கடும் வயிற்று வலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர் வீட்டில் பூஜை அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.