திண்டிவனம் அருகே குட்கா விற்ற முதியவர் கைது

54பார்த்தது
திண்டிவனம் அருகே குட்கா விற்ற முதியவர் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த உள்ள நல்லாளம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பிரம்மதேசம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் இன்று(செப்.29) நல்லாளத்தில் உள்ள ராஜேந்திரன், (60); என்பவரது டீ கடையில் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி