விழுப்புரம் வட்டம், தொடா்ந்தனூரில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் எஸ். பி. ப. சரவணன் உத்தரவின்படி, வளவனூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கபாண்டியன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனா். இதில், சுமாா் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் கடையின் உரிமையாளரான தொடா்ந்தனூா், ராகவேந்திரா நகரைச் சோ்ந்த கந்தசாமி மனைவி கனகவள்ளியை (39) கைது செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்களை சப்ளை செய்ததாக புதுச்சேரியைச் சோ்ந்தவரை தேடி வருகின்றனா்.