அதிமுக பிரமுகர் ஹோட்டலில் கொள்ளை: சிசிடிவி காட்சி

73பார்த்தது
திண்டிவனத்தில் அ. தி. மு. க பிரமுகரின் ஹோட்டல் கடையில் பணம், செல்போன், சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சி. சி. டிவி காட்சி வெளியீடு.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். அ. தி. மு. க பிரமுகரான இவர் திண்டிவனம் அடுத்த  பாதிரி கிராமம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பதியார் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார்.  


இந்த நிலையில் நேற்று கடையில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளார்.

அவர் கடையை விட்டு விட்டு அருகில் உள்ள கழிவறைக்குச் சென்ற போது, அதை நோட்டமிட்ட இரண்டு இளைஞர்கள் கடையின் உள்ளே புகுந்து கல்லாவில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் பணம், 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் மற்றும் ஒரு செல்போனை லாவகமாக திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சி. சி. டிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.  


இந்த கொள்ளை சம்பவம் குறித்து அதிமுக பிரமுகர்

சங்கர் அளித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சி. சி. டிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.