பாமக நிர்வாகி பெயர் ஓட்டர் லிஸ்டில் "மிஸ்சிங் "

2216பார்த்தது
திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் நாடாளுமன்ற (தனி), தொகுதி, திண்டிவனம் சட்டமன்ற (தனி) தொகுதியில் உள்ள திண்டிவனம் ஆர். எஸ். பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் மகன் ரமேஷ். இவர் விழுப்புரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் துணை தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் உள்ள குடும்ப அங்கத்தினருக்கு பூத் சிலீப் வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவரது பெயர் மட்டும் விடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தனது பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் முறையிட்டார்.

இதில் இறந்த தனது தந்தை பால்பாண்டியன் பெயர் நீக்கப்படுவதற்கு பதிலாக பா. ம. க மாவட்ட துணை தலைவர் ரமேஷ் பெயர் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு சில குறிப்பிட்ட ஆவணங்களை பயன்படுத்தி இந்த தேர்தலில் வாக்களிக்கலாம் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட துணைத் தலைவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி