விபத்தில் ஐ. டி. பெண் ஊழியா் மரணம்

58பார்த்தது
விபத்தில் ஐ. டி. பெண் ஊழியா் மரணம்
மயிலம் அருகே சாலை தடுப்புக் கட்டையில் பைக் மோதியதில் ஐ. டி. பெண் ஊழியா் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், மோகனூா், வளையப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோந்த கிருஷ்ணமூா்த்தி மகள் நந்தினி (28). புதுக்கோட்டை பகுதியைச் சோந்த சுபாஷ் சந்திரபோஸ் மகன் அரவிந்த் கண்ணன்(25). இருவரும் சென்னையில் உள்ள தனியாா் ஐ. டி. நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வந்தனா்.

இந்நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் அடுத்த செண்டூா் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக தடுப்புக் கட்டையில் பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த நந்தினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். அரவிந்த் கண்ணன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.

இதுகுறித்து, மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி