தீ தொண்டு நாள் அனுசரிப்பு

62பார்த்தது
தீ தொண்டு நாள் அனுசரிப்பு
விழுப்புரத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீயணைப்பின் போது உயிர் நீத்த வீரர்களுக்கான தீ தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தீயணைப்பு வீரர்களின் நினைவு துாணில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

உதவி மாவட்ட அலுவலர்கள் சிவசங்கரன் ஜெய்சங்கர் உட்பட தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

அதே போல், திருவெண்ணெய்நல்லுார், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனுார், வானுார், மரக்காணம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலும் நேற்று தீ தொண்டு நாள் கடை பிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.