ஆம்னி பேருந்து மீது கல்வீச்சு பிடிபட்ட போதை ஆசாமி

52பார்த்தது
திண்டிவனத்தில் மது போதையில் ஆம்னி பேருந்தை கல் எறிந்து தாக்கிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள வாட்டர் டேங்க் அருகே பெங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் மீன் கடை வைத்து நடத்தி வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான திண்டிவனம் ரோஷனை பகுதியை சேர்ந்த தினேஷ் மது போதையில் ஆம்னி பேருந்தின் கண்ணாடி மீது கற்களை வீசியதில் பேருந்தின் கண்ணாடி மூன்று இடங்களில் உடைந்தது. உடனே பேருந்து ஓட்டுனர் கடலூர் குண்டு உப்பளவாடி பகுதியை சேர்ந்த தவுபீக் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் மது போதையில் பேருந்தின் மீது கல் வீசிய நபரை பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் ரோஷனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரித்திர பதிவேடு குற்றவாளியான தினேஷை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.