ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நிஜாம்பட்டினம் மண்டலம் கோட்டா பாலம் என்ற இடத்தில் அமரேந்திரன் என்பவரை அவரது மனைவி நடுரோட்டில் வைத்து கொலை செய்துள்ளார். குடிபோதையில் இருந்த கணவன், மனைவியிடம் சண்டை போட்டுள்ளான். இதனால் ஆத்திரத்தில் மனைவி கட்டையால் அடித்து கணவனை கொலை செய்துள்ளார். இதில் அமரேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.