வேலூர்: பொது தேர்வு குறித்து ஆலோசனைக் கூட்டம்!

80பார்த்தது
வேலூர்: பொது தேர்வு குறித்து ஆலோசனைக் கூட்டம்!
வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, தலைமையில் மணியளவில் நடைபெற்றது.

அப்போது, தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்துறை அலுவலர்களுக்கும் தேர்வு மையங்கள் அமைந்துள்ள வழித்தடங்களில் போதுமான பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக அலுவலர்களுக்கும், வினாத்தாள் கட்டுகாப்பு மையம் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு பாதுகாப்பு உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கௌதமன் மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் பாப்பாத்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலியமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமசந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு. பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி