புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், "அதிக மழைப்பொழிவை பெற்றுவரும் நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்காக JCB இயந்திரங்கள், மர அறுப்பான்கள், ஜெனரேட்டர்கள், மோட்டார் பம்புகள், படகுகள் தயார் நிலையில் உள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கடலூருக்கு தலா ஒரு குழுவும் விரைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.