மன்சூர் அலிகான் காரில் பறக்கும் படையினர் சோதனை!

3630பார்த்தது
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் உள்ளிட்டவை யாராவது கொண்டு செல்கிறார்களா என தொடர்ந்து சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் அடுத்த அப்துல்லாபுரம், பென்னாத்தூர், சோழவரம், உள்ளிட்ட பகுதிகளில் மன்சூர் அலிகான் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரிக்க அரியூர் பகுதிக்கு வந்தார். அப்பொழுது மன்சூர் அலிகான் காரை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள் மேற்கொண்ட சோதனையில் பணம் பரிசுப் பொருட்கள் ஏதும் கைப்பற்றப் படவில்லை. மேலும் இது வழக்கமான சோதனை தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி