சத்துவாச்சாரியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி

78பார்த்தது
சத்துவாச்சாரியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி
வேலூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்துவாச்சாரி பகுதியில் வீடுகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் மருந்துகளை தெளித்து சுகாதார நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி