திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலங்காயம் பூங்குளம் ஊராட்சி செட்டி வட்டம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிக்கு எதிரே பழுதடைந்த ஒரு கிணறு உள்ளது. மாணவர்கள் விளையாடும் போது தவறி விழுந்து விடுகின்றனர். இதனை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து சுற்று சுவர் எழுப்ப வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க உறுப்பினர் ராஜா பெருமாள் ஆட்சியரிடம் மனு அளித்தார்.