சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாக இருப்பேன் - ஏசிஎஸ் பேட்டி

80பார்த்தது
தேசிய ஜனநாயக கூட்டணியில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு, மசீகம், பாக்களாப்பள்ளி, சி. டி செருவூர், பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் பேரணாம்பட்டு பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஏசி சண்முகம் கூறுகையில், தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே இஸ்லாமிய மக்கள் முப்பதாயிரம் குடும்பங்களுக்கு பிரியாணி செய்வதற்கான பொருள்கள் அடங்கிய தொகுப்பை கொடுத்துள்ளேன்.

இஸ்லாமிய சொந்தங்கள் நான் எம் பி யாக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். தேர்தல் முடிவில் அது நிச்சயமாக தெரியும். இந்த கூட்டணி சொந்த கூட்டணி. இது என்னுடைய தாய்வீடு, குடும்பம்.

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு முதல் மரியாதை கொடுப்பேன். சிறுபான்மையினருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் இந்த ஏசி சண்முகம் பாதுகாவலனாக இருப்பேன். வெற்றி பெற்ற பிறகு வேலூர் எம்பி என்றுதான் பெயரை தவிர, கட்சிக்கு எம்பி என்று கிடையாது, "என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி