பள்ளிப்பட்டு ஏரியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

83பார்த்தது
பள்ளிப்பட்டு ஏரியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 11 காவல் ஆய்வாளர்கள், 69 உதவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 452 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாணியம்பாடி முழுவதும் வீதிகள் வழியாக ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு விநாயகரை பள்ளிப்பட்டு உள்ள ஏரியில் கரைக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.