பிஸ்கட் என நினைத்து எலி பிஸ்கட்டை சாப்பிட இரு சிறுமிகள்

1559பார்த்தது
*கந்திலி அருகே பிஸ்கட் என நினைத்து எலி பிஸ்கட்டை சாப்பிட்ட இரு சிறுமிகள் அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை*

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோக்கியம் ஊராட்சி அனுமந்தனூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன். இவர் கோயம்புத்தூரில் கட்டிட வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணம்மாகி கிருத்திகா (10) மற்றும் ஜெனித்தா என்கிற மூன்று வயது பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதால்
எலி பிஸ்கட் வாங்கி வண்டி டிக்கியில் வைத்து விட்டு இவர் கோயம்புத்தூருக்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இரு சிறுமிகளும் வண்டி டிக்கியில் இருந்த எலி பிஸ்கட்டை எடுத்து பிஸ்கட் என நினைத்து இரு சிறுமிகளும் சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் இரு‌சிறுமிகளும் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர் இதனை பார்த்த சிறுமியின் தாயார் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இரு சிறுமிகளுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து கந்திலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி