திருப்பத்தூர்: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

57பார்த்தது
திருப்பத்தூர்: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!
அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசிக்க அனைத்து அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி