*திருப்பத்தூர் அருகே விளையாட்டு வினையான சம்பவம்! அதி வேகமாக வந்த கார் மோதி முதியவர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்த அதிபயங்கர சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் முத்து (60) இவர் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது முத்துவின் தங்கை மகனான வெங்கடேசன்(24) இவருக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் ஆண் பிள்ளை உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி இரவு காரில் அமர்ந்து வெங்கடேசன் மற்றும் அவரின் 4 வயது குழந்தை காரை ஸ்டார்ட் பண்ணி அளவுக்கு அதிகமாக ரேஸ் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக காரின் கியர் விழுந்ததில் அதிவேகமாக வந்து முத்துவின் மீது அதிபயங்கரமாக மோதியதில் தூக்கி எறியப்பட்டார்.
அக்கம் பக்கத்தில் அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் முத்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறிய குழந்தையை வைத்து காரில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கியர் விழுந்து முதியோர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.