ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

64பார்த்தது
ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ராணிப்பேட்டை சிறுமலர் மடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

11, 12-ம் வகுப்பு பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 9-ந்தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு 10-ந்தேதியும் போட்டிகள் நடக்கிறது. போட்டி களில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

போட்டிகளில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் அரசு, தனியார் கலை, வேளாண்மை, பொறியல், தொழில்நுட்பம், செவிலியர், சட்டம், மருத்துவம் உள்பட பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

போட்டிகளுக்கான தலைப்பு போட்டி தொடங்கும் முன்பு நடுவர்கள் முன்னி லையில் அறிவிக்கப்படும். போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்பு படிவத் தைப் பூர்த்தி செய்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி