ராணிப்பேட்டை அருகே ரயில் மோதி தொழிலாளி பலி!

80பார்த்தது
ராணிப்பேட்டை அருகே ரயில் மோதி தொழிலாளி பலி!
ராணிப்பேட்டை டவுன் பெல் குடியிருப்பை சேர்ந்தவர் செங்கதிர் (வயது 38), தொழிலாளி. இவர் வாலாஜா- முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து செங்கதிர் எதிர்பாராத விதமாக ரயிலில் அடி பட்டு இறந்து போனாரா? அல்லது ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி