வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வாக்கு சேகரித்த கதிர் ஆனந்த்

53பார்த்தது
வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று கூட்டணி கட்சியினருடன் இணைந்து, வேலுர் நேதாஜி மார்க்கெட்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேலூர் லாங்கு பஜார், பழைய மீன் மார்க்கெட், சுண்ணாம்புகாரத் தெரு, பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பலசரக்கு மார்க்கெட், பழம் மார்க்கெட், ஆகிய இடங்களுக்கு நடந்தே சென்று, அங்குள்ள வியாபாரிகளை சந்தித்து, மார்க்கெட்டுக்கு பொதுமக்களை சந்தித்து தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் பழங்களை கொடுத்தும் பூக்களை கொடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் தனக்கு வாக்களித்தால் விலைவாசியை குறைப்பதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கின்ற பொருட்களின் விலையை குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி