காவல்துறையினர்க்கு தொப்பியை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

80பார்த்தது
வெயில் அதிகமாக இருக்குது இந்த தொப்பியை நீங்க இனிமேல் போடுங்க என போக்குவரத்து காவல்துறையினர்க்கு தொப்பியை வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கின்ற நிலையிலும் காவல்துறையினர் வெயில் என பாராமல் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை அறிந்த வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன். வேலூர் மக்கான் சந்திப்பில் காவல் துறையினரை பாதுகாக்கும் விதத்தில் அவர்களுக்கு ஏற்றவாறு ரவுண்ட் தொப்பியை வழங்கி சற்று இளைப்பாறுதலாக இருப்பதற்காக மோர் ஜூஸ் வழங்கி போக்குவரத்து பணியில் ஈடுபடும்போது தங்களையும் பாதுகாப்புடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி வழங்கி சென்றார்.

தொடர்புடைய செய்தி