வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் உரிமைக்குரல் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், காளை மாடுகளை பாதுகாக்கும் வகையிலும் அரசு ஆற்றில் மணல் அள்ளுவதற்கு எங்களுக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுவரை நிறைவேற்றவில்லை.
இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி தர வேண்டும் என்றும் கூறினர். ஆகவே எங்களின் கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் உள்ள சுற்றுச்சூழல் தலைமை அலுவலகம் முன்பாக வரும் 18 ம் தேதி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறியிருந்தனர்.