குப்பைகளை மூட்டைகளில் சுமந்து செல்லும் துப்புரவு ஊழியர்கள்

59பார்த்தது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் குப்பைகளை சேகரிக்க வரும் துப்புரவு ஊழியர்கள் சாக்கு பைகளில் குப்பைகளை சேகரித்து கைகளில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்க பேட்டரியினால் இயங்கும் வாகனங்கள் தனித்தனியே வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேர்ணாம்பட்டு சேர்மன் பிரேமா வெற்றிவேல் என்பவரின் 17 வது வார்டு மற்றும் பன்னிரண்டாவது வார்டு உள்ளடக்கிய திரு. வி. க நகர் பகுதிக்கு வரும் பேட்டரியினால் இயங்கக்கூடிய குப்பை வண்டி பழுதடைந்துள்ளது. மேலும் 4 வண்டிகள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க வரும் துப்புரவு ஊழியர்கள் கைகளினால் சாக்கு பைகளில் குப்பைகளை சேகரித்து தோளில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து துப்புரவு ஊழியரிடம் கேட்டபோது பேட்டரி வண்டி டயர் பஞ்சர் ஆகி உள்ளது இதனால் பேட்டரி வண்டி சரி செய்து தரவில்லை ஆகையினால் குப்பைகளை சாக்குப்பையில் சேகரித்து ஓரிடத்தில் கொண்டு போய் கொட்டுகிறோம் அங்கிருந்து மாற்று வண்டியின் மூலம் குப்பைகளை அகற்றுகின்றனர். இதே நிலைதான் கடந்த இரு வாரமாக நீடிக்கிறது என்று தெரிவித்தனர்.