வள்ளிமலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது

577பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலையில் பெற்ற பிரசித்தி பெற்ற சுவாமி திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பிரம்ம உச்சுவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்ம உட்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு வள்ளி, முருகன் தெய்வானை சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் ஒவ்வொரு நாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பின்னர் வள்ளி முருகன் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த பிரம்மோற்சவ திருத்தேர் விழா ஒட்டி பத்து தற்காலிக உண்டியல் அமைக்கப்பட்டு தற்போது காணிக்கை உண்டியல் என்னும் பணி இன்று நடைபெற்றது.

இதில் ரொக்கப் பணமாக 24 லட்சத்தில் 19 ஆயிரத்து 220 ரூபாயும் 21 கிராம் தங்க நகையும் 355 கிராம் வெள்ளி நகைகளும் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் உதவி ஆணையர் ஜீவானந்தம் ஆய்வாளர் சுரேஷ்குமார் செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி