கே வி குப்பம் பகுதியில் குழந்தைகளுக்கான கோடை விழா

82பார்த்தது
வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கே. வி. குப்பம் வட்டம் செஞ்சி அடுத்த காளாம்பட்டு அறிவுத்தோட்டம் இணைந்து குழந்தைகளுக்கான கோடை விழா இன்று 05. 05. 2024 காளாம்பட்டு அறிவுத்தோட்டத்தில் நடைபெற்றது,
ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக விளையாட்டுடன் இயற்கை அறிதல் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை மணியளவில் துவங்கியது
அறிவுத்தோட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கு. செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெ. அமுதா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முனைவர் செ. நா. ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.
மாவட்டத் துணைத் தலைவர் கே. விஸ்வநாதன் அறிவியல் செய்முறைகளை செய்து காட்டி தொகுப்புரையாற்றினார் மாவட்ட பொருளாளர் வீர. குமரன் மாவட்ட நிர்வாக குழு பா. ராஜேந்திரன் பெ. ராமு ப. சேகர் ச. இளவழகன் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கோபால ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி