வாலிபருக்கு பேனா கத்தியால் குத்து. குற்றவாளி கைது

63பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்டறதாங்கல் வீர கோவில் தெரு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (21) இவர் தச்சு வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் தினேஷ்குமார் நேற்று சம்பவத்தன்று தனது நண்பர்கள் பிரகாஷ் (21) மற்றும் பிரசாந்த் (22) ஆகியோரோடு இருசக்கர வாகனத்தில் பழைய காட்பாடி வெள்ளைக்கல் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது மணிகண்டன் (29) என்ற வாலிபர் குறுக்கே வந்துள்ளார் அப்போது தினேஷ் தரப்பினர் ஓரமாக செல்லும்படி மணிகண்டனிடம் கூறியுள்ளனர் இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த பேனாக்கத்தியால் தினேஷ்குமாரை மார்பிலும் முதுகிலும் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் உடனடியாக அவரை மீட்டு அவரது நண்பர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு தினேஷ் குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

இந்த சம்பவம் குறித்து தினேஷ்குமாரின் தந்தை வெற்றிவேல் அளித்த புகாரின் அளித்த பேரில் வழக்கு பதிவு செய்து காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் காட்பாடி காங்கேயநல்லூர் ரோடு வெள்ளைக்கல் மேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி