வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் அங்கு போதிய இட வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை இல்லாததால் பள்ளிக்கு சொந்தமாக ரங்காபுரத்தில் உள்ள இடத்தில் ஆண்களுக்கு என தனியாக பள்ளி கட்டி தர வேண்டும் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்து வரும் நிலையில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை இனியும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதாக பேட்டி அளித்தார்.